நடிகர் விஜய், கமல், ரஜினி வரிசையில் இணைந்த விஜய் சேதுபதி.. வெளிவந்த 51வது படத்தின் வித்தியாசமான டைட்டில்..!

By Mahalakshmi on வைகாசி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வரும் இவர் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றார். முன்பெல்லாம் கிடைக்கும் திரைப்படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது தன்னுடைய கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் .

   

ஹீரோ என்கின்ற ஒரு வட்டத்திற்குள் அடங்கி விடாமல் வித்தியாசமான கேரக்டர்களிலும், நடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார். ஒரு படத்தில் ஹீரோவாக பார்த்தால் மற்றொரு படத்தின் வில்லனாக அசத்தியிருப்பார். விவசாயி, போராளி, தாத்தா என பல கெட்டப்புகளில் இவரை நம்மால் பார்க்க முடியும். அது மட்டும் இல்லாமல் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கையாக நடித்தும் அசதி இருப்பார்.

   

 

தொடர்ந்து சிறந்த நடிகராக அசதி வரும் விஜய் சேதுபதி சினிமாவிற்குள் வந்த குறுகிய காலத்தில் 50 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரது 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ்-ஆக உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் 51 வது படத்தை ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் இயக்கிய ஆறுமுககுமார் இயக்கி இருக்கின்றார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கும் நிலையில் யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்கள். ஐன்ஸ்டீன் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் இன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் வெளியாகி இருந்தது.

விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது திரைப்படத்திற்கு ஆஷ் என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் படத்திற்கு கோட் என்றும், கமல்ஹாசன் படத்திற்கு தக்கலைப் எனவும், நடிகர் ரஜினி திரைப்படத்திற்கு ஜெயிலர் என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டு வந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி படத்திற்கும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.