பிளாக் ஃபண்ட் மற்றும் ஒயிட் ஷர்ட் அணிந்து.. டிப்டாப்-ஆக காட்சியளிக்கும் கயல் ஆனந்தி.. வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்..!

By Mahalakshmi on வைகாசி 17, 2024

Spread the love

கயல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஆனந்தி வைட் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்டில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

ஆந்திராவில் பிறந்த பிரபல நடிகையான ஆனந்தி, தெலுங்கு திரையுலகம் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கினார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் பொறியாளன்.

   

 

அந்தத் திரைப்படத்தில் அந்த அளவுக்கு பெயரை பெறவில்லை என்றாலும் கயல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது.

அன்று முதல் இவர் கயல் ஆனந்தி என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார். தமிழில் பல நல்ல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் கயல் ஆனந்தி தமிழில் இந்த ஆண்டு வெளியான வைட்ரோஸ் என்கின்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இருப்பினும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் கயல் ஆனந்தி அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது ஒயிட் ஷர்ட், பிளாக் பாண்ட் அணிந்து வித்தியாசமாக போட்டோ சூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..