தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர் தான் அவர். மூன்று திருமணங்களை செய்து கொண்டார் பாலு மகேந்திரா. 1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார். இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார். இந்த தற்கொலைக்குப் பின்னணியில் பாலு மகேந்திரா இருந்ததாக அப்போது சில பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது பற்றி பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். பாலு மகேந்திராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துகளை சொல்லியுள்ளனர்.
ஷோபா தன் வாழ்வில் வந்து வெகுசீக்கிரமே சென்றுவிட்டதைதான் பாலு மகேந்திரா மூன்றாம் பிறை என்ற படமாக எடுத்ததாக அவரேக் கூறியுள்ளார். அந்த படத்தின் ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்துக்கு விஜி (ஷோபாவின் இயற்பெயர்) என்ற பெயரைதான் வைத்திருந்தார்.

#image_title
இந்நிலையில் பிரபல சீரியல் சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய முதல் படத்தில் தனக்கு சகோதரியாக நடித்த ஷோபா பற்றி பேசியுள்ளார். அதில் “நானும் ஷோபாவும் அக்கா தங்கச்சியாக என் முதல் படத்தில் நடித்தோம். ரொம்ப நல்ல பொண்ணு. என் மடியில வந்து உக்காந்துக்கும். இவ்ளோ சின்ன வயசுல போயிருக்கக் கூடாது.
அவளோட வாழ்க்கையை பாலு மகேந்திரா உள்ள புகுந்து அழிச்சிட்டான். அவனக் கண்டாலே எனக்குப் புடிக்காது. அவன் ஒரு இடத்துக்கு வந்தா நான் அங்கிருந்து கிளம்பிவிடுவேன். அவர் நல்ல கேமராமேன். நல்ல மனுசன். ஆனால் ஒரு புள்ளையோட வாழ்க்கையைக் கெடுத்துட்டான். இதுக்கு மேல அவர பத்தி நான் ஒன்னும் பேச விரும்பல” என எமோஷனலாகி பேசியுள்ளார்.
