தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றார். அதைத் தொடர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா உள்ள பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

சயின்ஸ் பிக்ஸ் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யா உள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.
இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான விசில் போடு பாடலும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிக்காக சென்று விடும் என்று கூறப்படுகின்றது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். அதில் ஒன்று இளமையான கதாபாத்திரம் என்பதால் டிஏஜிங் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறு வயது விஜயை உருவாக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை வெங்கட் பிரபு அமெரிக்கா செல்ல மறுநாள் சனிக்கிழமை நடிகர் விஜய் அமெரிக்காவுக்கு சென்றிருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இந்த திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றதாம். இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்த காட்சிகளை பிரேமலதாவிற்கு வெங்கட் பிரபு போட்டுக்காட்டி இருக்கிறாராம்.

இதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டாராம் பிரேமலதா. ஏற்கனவே விஜய் மீது சிறிது கோபம் இருக்கின்றது. அது என்னவென்றால் நடிகர் விஜய் விஜயகாந்த் உதவி செய்தது போல் தனது மகன்களுக்கு விஜய் நடிப்பில் எந்த ஒரு உதவியும் செய்யாததால் சிறிய கோபத்தில் இருந்த பிரேமலதா. இந்த காட்சியை பார்த்து சற்று சமாதானமாகி இருக்கிறார் என்று வலைப்பேச்சு பிஸ்மி பேசியிருக்கின்றார்.
