மீண்டும் அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்.. ஓஹோ இதுதான் விஷயமா..? வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on வைகாசி 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிகின்றார். அவரை தொடர்ந்து பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, அஜ்மல் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

   

சயின்ஸ் பிக்ஸ் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யாவில் உள்ள பகுதிகளில் நடைபெற்றது.

   

 

மேலும் இப்படத்திலிருந்து சமீபத்தில் விசில் போடு என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏஐ-யை தொழில்நுட்பத்தின் உதவியோடு மறைந்த நடிகர் விஜயகாந்த் கேமியா ரோலில் நடிக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக இன்று விஜய் அமெரிக்கா சென்றிருக்கின்றார். இந்த திரைப்படத்தில் இரண்டு விஜய் கதாபாத்திரத்தை ஒன்று இளமையான கதாபாத்திரம் என்பதால் டிஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலமாக அதனை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அது தொடர்பான படப்பிடிப்புக்காக தான் நடிகர் விஜய் தற்போது அமெரிக்கா சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகின்றது. இப்படத்தை ஹச் வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.