சிவாஜியும் சாவித்ரியும் காதலர்களா? … அட்டர் ப்ளாப் ஆன படம்… காரணம் என்ன தெரியுமா?

By vinoth on வைகாசி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.

எப்படி நடிகர்களில் சிவாஜி கணேசனோ அது போல நடிகையர் திலகம் என அழைக்கப்பட்டவர் சாவித்ரி. இவர்கள் இருவரும் இணைந்து எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத படம் என்றால் அது பாசமலர் படம்தான்.

   

இந்த படத்தில் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருக்கும் அண்ணன் தங்கையாக நடித்திருந்தார்கள். இந்த படத்தில் அவர்கள் இருவரின் நடிப்பும் இன்றளவும் தமிழ் சமூகத்தில் அண்ணன் தங்கை உறவுக்கு ஒரு வகைமாதிரியாக இருந்து வருகிறது. அன்பாக இருக்கும் அண்ணன் தங்கையினரை ‘பெரிய பாசமலர் சிவாஜி சாவித்ரி’ என கேலி செய்வது வாடிக்கையான ஒன்று. அதே போல இந்த படத்தில் இடம்பெற்ற மலர்ந்தும் மலராத பாடல் சாகாவரம் பெற்ற பாடலாக உள்ளது.

   

இந்நிலையில் இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் போதே அவர்கள் நடிப்பில் உருவான எல்லாம் உனக்காக என்ற படமும் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் இருவரும் காதலர்களாக நடித்துள்ளனர். பாசமலரில் அவர்களை அண்ணன் தங்கையாக பார்த்து நெகிழ்ந்து போன தமிழ் ரசிகர்கள், அவர்களை காதலர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.

 

இதனால் எல்லாம் உனக்காக திரைப்படம் அட்டர் ப்ளாப் ஆகியுள்ளது. இதனால் சில ஆண்டுகளுக்கு இருவரும் ஜோடியாக சேர்ந்து நடிப்பதைத் தவிர்த்துள்ளனர். அந்த அளவுக்கு பாசமலர் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை ஆழமாக பாதித்துள்ளது.