Connect with us

நான் இப்படி தான் டைரக்டர் ஆனேன்.. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சொன்ன சுவாரசிய தகவல்..!

CINEMA

நான் இப்படி தான் டைரக்டர் ஆனேன்.. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சொன்ன சுவாரசிய தகவல்..!

 

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல் ரெப்ரசனேட்டிவாக இருந்தார். இதைத் தொடர்ந்து சினிமாவுக்குள் நுழைந்து இவர் ஆடியோ கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது பாரதிராஜா, இளையராஜா இளையராஜா உடன் நட்பு ஏற்பட்டது.

   

பின்னர் மூன்று பேரும் இணைந்து ராஜாஸ் சினி கம்பெனி என்ற நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களை விநியோகம் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து தியாகராஜனை பாரதிராஜா நடிகராகவும் அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் புகழ் அடைந்த தியாகராஜன் மலையூர் மம்பட்டியான் என்ற திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். முதன்முதலாக பூவுக்குள் பூகம்பம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தில் அவர் இயக்குனராக அறிமுகமானது எப்படி என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.

பூவுக்குள் பூகம்பம் என்ற திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆர்மி சம்பந்தப்பட்ட கதை. அந்த படத்திற்கு செல்லும்போது வேறு ஒரு இயக்குனரை அழைத்துக் கொண்டு சென்று ஹிந்தி இங்கிலீஷ் அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது மிகவும் கஷ்டமாகவும் இருந்தது. இதனால் அப்படத்தை நானே இயக்க முடிவு செய்து அந்த படத்தை இயக்கினேன். இப்படி தான் எனது இயக்குனர் பயணம் தொடங்கியது என்று பகிர்ந்து இருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top