Connect with us

CINEMA

புது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரைட் கார்த்திக் – ஜெஸ்ஸி காதல் ஜோடி… அப்படின்னா ரொமான்ஸ் சும்மா தாறுமாறா இருக்குமே…

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர் நடிகர் சிம்பு . 2010ம் ஆண்டு சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க காதல் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் சிம்புவும் – த்ரிஷாவும் நடிப்பில் அசத்தியிருந்தனர்.

   

யதார்த்தமான காதலை தற்போதைய சூழலில் காதலர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை, துல்லியமாக படம் பிடித்திருப்பார் கெளதம் மேனன். படம் முழுவதும் சிம்பு – த்ரிஷா இருவருக்குமான உரையாடல்கள் தான் அதிகமாக இருந்தன. ஆனாலும், அவையனைத்தும் ரசிக்கும் படி ரொம்பவே கிளாஸிக்காக இருந்தது. சிம்பு – கெளதம் – ஏஆர் ரஹ்மான் முதன்முறையாக சிம்பு – கெளதம் – ஏஆர் ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்தில் தான் இணைந்தது.

சிம்புவின் கார்த்தி, த்ரிஷாவின் ஜெஸ்ஸி கேரக்டருக்கு ஏஆர் ரஹ்மானின் இசையே உயிர் கொடுத்திருந்தது. ஒவ்வொரு பாடல்களும் சரி, பின்னணி இசையும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ரசிகர்களால் கொண்டாட வைத்தது. இவர்கள் இருவரையும் மீண்டும் ஜோடியாக பார்க்க ரசிகர்களுக்கு எப்போதுமே ஆசை இருந்தது. தற்போது அந்த ஆசை நடந்து விட்டது.

அதாவது நடிகை திரிஷா தற்போது கமலின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் சிம்பு, நடிகை திரிஷாவின் கணவர் கதாபாத்திரத்தில் ரோலில் நடிக்க உள்ளாராம். தற்பொழுது இத்தகவல் அவரது ரசிகர்களை செம குஷிப்படுத்தியுள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top