தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

#image_title
இத்திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார். இவர் நடிப்பை விட்டு விலகுவது அவரது ரசிகர்களுக்கு கஷ்டத்தை கொடுத்தாலும், இனி அரசியலில் ஈடுபட போவதை நினைத்து உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் GOAT படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘விசில் போடு’ வெளியானது. விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது பற்றியும் அந்த பாடலில் வரிகள் இடம்பெற்று இருந்தது. இந்த பாடல் இணையத்தில் ரிலீசாகி 1 1|2 நாளில் 30 மில்லியன் வியூஸ்களை கடந்து இமாலய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ஒருபுறம் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்தால், மறுபுறம் நெகடிவ் கமெண்ட்ஸ்களும் வரத் தொடங்கியது. அனிருத் விஜய்க்கு இசையமைத்தப் பாடல்களுடன் விசில் போடு பாடலை ரசிகர்கள் ஒப்பிட்டு பேசத் தொடங்கினார்கள். மறுபக்கம் அஜித் ரசிகர்கள் யுவன் அஜித் படங்களுக்கு மட்டும்தான் மாஸான பாடல்களை கொடுப்பார் என்று பரப்ப தொடங்கினார்கள்.

இப்படி ‘விசில் போடு’ பாடலைப் பற்றிய பல்வேறு விவாதங்கள் ஒருபக்கம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டியாக்டிவேட் செய்துள்ளது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ‘ விசில் போடு’ பாடலுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் தான் காரணமாக இருக்குமோ..? என்று ரசிகர்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இது உண்மையா..? இதற்கு யுவன் ஷங்கர் ராஜா விளக்கமளிப்பாரா..? பொறுத்திருந்து பார்க்கலாம்.

