ஆண்ட்ரியாவின் மிரட்டலான நடிப்பில்… அனல் பறக்கும் வசனங்கள்… அறம் பட இயக்குனரின் ‘மனுஷி’ ட்ரைலர் இதோ…

By Begam

Published on:

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கோபி நயினார். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் அண்ட்ரியா நடிக்கும் ‘மனுசி’ என்ற படத்தை இயக்குகிறார்.

   

அறம் படத்தை போன்று மனுஷி படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மனுஷி படத்தின் டிரைலர் வீடியோவை நேற்று நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்த டிரைலரை பார்க்கும்போது சமூகப் பிரச்சினைகளை பேசும் கதையாக மனுஷி அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.

917660

இத்திரைப்படத்தில் நடிகர் நாசர், டானா காரன் படத்தின் இயக்குனர் தமிழரசன் ஆண்ட்ரியா, இயக்குனர் பாலாஜி சக்திவேல் தங்களது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ட்ரைலரில் நடிகை ஆண்ட்ரியாவின் குடும்பத்தினரை ஹவுஸ் அரெஸ்ட் செய்து தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் விசாரணை நடத்துகின்றனர்.

அந்த விசாரணையில் போலீசார் ஆண்ட்ரியாவை எப்படி எல்லாம் சித்திரவதை செய்கின்றனர் என்பதை காட்டியிருக்கும் விதமும் அவர்களுக்கு வசனம் மூலமாக ஆண்ட்ரியா பதில் கொடுக்கும் விதமும் டிரைலரில் மிரட்டியுள்ளது. இளையராஜாவின்  பின்னணி இத்திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது என்றே கூறலாம். இதோ அந்த ட்ரைலர் வீடியோ…