Connect with us

CINEMA

வேற மாறி இருக்கே.. நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ‘சியான் 62’ பட டைட்டில் அறிவித்த படக்குழு..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர்  நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இதில் நடிகர் விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார்.

   

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தான் இப்படத்தை தயாரித்து உள்ளார். கே.ஜி.எப் எனும் கோலார் தங்கவயலில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் இப்படத்தை இயக்கி இருக்கிறார் பா.இரஞ்சித். இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் நடிகர் விக்ரம்.

அடுத்ததாக விக்ரமின் 62 ஆவது படத்தை எஸ்யு அருண்குமார் இயக்க உள்ளார். இப்படத்தை ரியாஸ் ஷிபு தயாரிக்கும் நிலையில் சியான் 62 படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி இருந்தது. மேலும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நேற்று  விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சியான் 62 படத்தின் டைட்டில் வீடியோ வெளியிட்டு உள்ளது.

அதன்படி இப்படத்திற்கு வீரதீர சூரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது ரசிகர்கள் ‘டைட்டிலே சும்மா வெறித்தனமா இருக்கே’.. என்று கூறி வருவதோடு, அவர்களின் எதிர்பார்ப்பையும் எகிறச்  செய்துள்ளது. இதோ அந்த அறிவிப்பு.

Continue Reading

More in CINEMA

To Top