Connect with us

CINEMA

கில்லி படத்துல முதலில் நடிக்க இருந்தது விஜய்& திரிஷா இல்லையாம்… இயக்குனர் சாய்ஸ் யார் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

2004 ஆம் ஆண்டு ரிலீசான கில்லி படம் விஜய்யின் கேரியரில் மிக முக்கியமானப் படமாக அமைந்தது. அதுவரை விஜய் படங்கள் பெறாத வெற்றியை அவருக்குக் கொடுத்து அவரை சூப்பர் ஸ்டார் நடிகராக்கியது.  தெலுங்கில் மகேஷ்பாபு மற்றும் திரிஷா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் உருவான ஒக்கடு படத்தின் ரீமேக்தான் தரணி இயக்கிய கில்லி.

வழக்கமாக ரீமேக் படங்கள் என்றால் காட்சிக்கு காட்சிக்கு, ஷாட்டுக்கு ஷாட் அப்படியே எடுப்பதே வழக்கம். ஆனால் இந்த படத்தின் கதைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு முழுக்க முழுக்க மாற்றியிருந்தார் தரணி. சென்னை லோக்கல் பையனாக விஜய் நடித்திருந்த சரவணவேலு என்ற கதாபாத்திரம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.

   

இந்த படம் விஜய் திரிஷா, பிரகாஷ் ராஜ் அவர்கள் நடிப்பில் வித்யாசாகர் இசையமைப்பில் உருவாகிய இப்படம் பெரும் அளவில் பேசப்பட்டு ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்தது. விஜய், திரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகிய மூவருக்குமே இந்த படம் அடுத்த கட்டத்துக்கான கதவை திறக்கும் படமாக அமைந்தது.

இந்த படத்தை முதலில் ரீமேக் செய்யும் முடிவை எடுத்த போது இயக்குனர் தரணிக்கு ஹீரோ ஆப்ஷனில் விஜய் வரவே இல்லையாம். முதலில் அஜித் மற்றும் விக்ரம் ஆகியோரைக் கேட்டுள்ளார்கள். இதில் அஜித் முதலிலேயே விலகிவிட விக்ரம் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது விக்ரம் வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் கில்லி படத்துக்கு குறித்த நேரத்தில் கால்ஷீட் ஒதுக்கமுடியவில்லை.

அதே போல கதாநாயகியாக நடிக்க தரணி ஜோதிகாவைக் கேட்டிருந்தாராம். அவரும் சில காரணங்களால் கில்லி படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு விஜய்யும் த்ரிஷாவும் வந்துள்ளனர். படம் உருவாகி சூப்பர் ஹிட்டான நிலையில் விக்ரம்முக்கும் ஜோதிகாவுக்கும் காஸ்ட்லி மிஸ்ஸாக கில்லி அமைந்துவிட்டது. கில்லி ரிலீஸாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது மீண்டும் ரி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தகக்து.

Continue Reading

More in CINEMA

To Top