Connect with us

CINEMA

காதலரை கரம் பிடித்த ‘கனா’ சீரியல் அன்பரசி… வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்…

சீரியல் என்றாலே இல்லத்தரசிகள் மத்தியில் ஒரு தனி இடமுண்டு. அதை புரிந்துகொண்டு அவர்களுக்கு பிடித்தவாறு பல்வேறு சீரியல்களை பல சேனல்கள் ஒளிபரப்பு செய்து வருகின்றது.

   

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கனா.

பிரிந்து கிடக்கும் அப்பா மகள் எப்படி ஒன்று சேர்க்கிறார்கள்? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம். இந்த சீரியலில் நாயகியாக அன்பரசி என்ற கதாபாத்திரத்தில் நடிகை தர்ஷனா நடித்து வந்தார்.

உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடிக்க மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அன்பரசியாக நடித்து வரும் தர்ஷனா திருமணம் காரணமாக இந்த சீரியலில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு சீரியலில் இருந்து விலகிவிட்டார். நடிகை தர்ஷனா ஒரு டாக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அசோகன் அபிஷேக் என்பவரை காதலித்து வந்தார் நடிகை தர்ஷனா . அவரும் ஒரு  டாக்டர் தான். தற்பொழுது தர்ஷனா மற்றும் அபிஷேக் ஆகியோரின் திருமணம் இன்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top