பெரிய பெரிய பணக்காரர்களும் நடிகர்களும் சாமியார்களின் வலைக்குள் விழுவது என்பது சாதாரணமாக நடக்கக்கூடியவை. அந்த வகையில் நடிகர் ஸ்ரீகாந்த், ஒரு சாமியாரிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகியிருக்கிறார். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தனது வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதாவது ஸ்ரீகாந்த் வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஒரு சாமியாரால் மிகவும் கவரப்பட்டாராம். ஒரு முறை அந்த சாமியார், ஸ்ரீகாந்தின் வீட்டிற்கு வந்து உங்கள் வீட்டு வாளியில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள் என கூறியிருக்கிறார். அவர்களும் வாளியில் தண்ணீர் கொண்டு வந்திருக்கிறார்கள்.

திடீரென அந்த வாளியில் உள்ள தண்ணீரில் இருந்து குடல் ஒன்றை எடுத்தாராம் அந்த சாமியார். அதில் இருந்து ஸ்ரீகாந்த் அந்த சாமியாரின் வலையில் விழுந்துவிட்டாராம். அதன் பிறகு தொடர்ந்து ஸ்ரீகாந்திடம் பல விலை உயர்ந்த பொருட்களை கேட்டு வாங்கிக்கொள்வாராம்.
ஒரு முறை 5 மொபைல் ஃபோன்கள் வேண்டும் என்று கேட்டாராம். ஸ்ரீகாந்தும் வாங்கிக்கொடுத்தாராம். அதன் பிறகு ஒரு நாள் ஸ்ரீகாந்திடம் 2 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டாராம். ஸ்ரீகாந்தும் கொடுப்பாராம். இது போல் பணம், பொருட்கள் போன்றவற்றை கேட்டு வாங்கிக்கொள்வாராம்.

ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்தின் சினிமா வாழ்க்கையில் தலையிடத் தொடங்கினாராம் அந்த சாமியார். “இந்த இயக்குனரிடம் படம் நடி, அந்த இயக்குனர் வேண்டாம்” என்றெல்லாம் ஆர்டர் போட்டிருக்கிறார். “ஆஹா, இது எல்லாம் நமக்கு வேலைக்கே ஆகாது என்று நினைத்த ஸ்ரீகாந்த், அந்த சாமியாருடனான உறவை துண்டித்துக்கொண்டாராம். அதன் பின் அந்த சாமியார் ஒரு கட்டத்தில் “தயவுசெய்து எனக்கு லட்ச ரூபாய் பணம் தாருங்கள்” என்று கெஞ்சத் தொடங்கிவிட்டாராம். ஆனால் ஸ்ரீகாந்த் கண்டுகொள்ளவே இல்லையாம். இவ்வாறு ஒரு தகவலை வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
