தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளோடு சேனாதிபதியை இறக்கிய லைக்கா… ‘இந்தியன் 2’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு…  

By Begam on சித்திரை 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ்  பெரும் பொருட்செலவில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. உலகநாயகன் கமலஹாசன் தந்தை, மகன் என  இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து 1996 இல் வெளியான திரைப்படம் ‘இந்தியன்’.

   

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படம் தயாராகி வருகிறது. 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியன் 2 பட பிடிப்பானது பல்வேறு பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. பல மாதங்களாக நிறுத்தப்பட்ட இப்படப்பிடிப்பு  மீண்டும் தொடங்கியுள்ளது.

   

 

கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

வருகிற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி பல கட்டமாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிந்ததும், வருகிற மே 24-ஆம் தேதி இந்தியன் 2 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லைக்கா நிறுவனம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 2024 அன்று இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸாக இருப்பாக அறிவித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்பொழுது இத்திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த கமலின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதோ அந்த பதிவு…