அவர் சொல்ற மாதிரி என்னால இருக்க முடியாது.. இயக்குனர் பாலாவின் உண்மை முகத்தை பகிர்ந்த தாரை தப்பட்டை பட நடிகை..!!

By admin on சித்திரை 13, 2024

Spread the love

இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் தாரை தப்பட்டை படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தாரை தப்பட்டை படத்தில் அக்ஷயா நடித்திருந்தார். இவரது குத்தாட்டத்தை பாராட்டாதவர்கள் யாருமே கிடையாது.

   

இதனையடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் காமெடி கதாபாத்திரத்தில் அக்ஷயா நடித்து வருகிறார். மேலும் ஜீ தமிழ் குடும்ப விழாவில் சிறந்த காமெடியன் என்ற விருதும் அக்ஷயாவுக்கு கிடைத்தது. சமீபத்தில் ஒரு பேட்டியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிப்பு, டான்ஸ் இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டார்.

   

 

கதாபாத்திரம் நன்றாக சேலஞ்சிங்காக இருந்தால் நடிக்க செல்வேன். டான்ஸ் என்றால் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வேன் என கூறினார். மேலும் இயக்குனர் பாலா குறித்து கூறிய போது, எனக்கு நடிக்க வரும் என்பதை உணர்த்தியது பாலா சார் தான். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகிறார் என்றால் பின் டிராப் சைலன்ஸ் இருக்க வேண்டும். நான் ஸ்கூல்ல கூட அப்படி இருந்தது இல்ல, என்னால இருக்க முடியாது.

அவரு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிரித்தால் அது வேற லெவல் feel ஆ இருக்கும். ஒருமுறை அவார்ட் ஷோவில் அவரை பார்த்து கட்டிப்பிடித்தேன். அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். அதனை பார்த்த ரசிகர்கள் பாலா சார் தெய்வம்.. அவர தப்பா புரிஞ்சுகிட்டாங்க.. அப்படி இப்படின்னு பெருமையா தான் பேசினாங்க என அக்ஷயா கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)