பிரபல நடிகரான விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான கதையாம்சம் கொண்ட படங்களை தெரிந்து நடிப்பதில் விக்ரம் அதிக ஆர்வம் காட்டுவார்.

மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் விக்ரமுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தற்போது சித்தா படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு சியான் 62 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் நடித்த ஜெமினி படம் ரிலீஸ் ஆகி 22 ஆண்டுகள் ஆனது.

இதில் கிரண் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கடந்த 2002-ஆம் ஆண்டு ஜெமினி படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் சொல்லும் ஓ போடு வசனம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் படம் ரிலீஸ் ஆகி 22 ஆண்டுகள் ஆனதை ஒட்டி ஜெமினி ஸ்டைலில் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில் ஜெமினி படம் மீது காட்டி அன்பிற்கு மிக்க நன்றி. சுவாரசியமான அப்டேட்ஸ் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. அது என்னவா இருக்கும் என கெஸ் பண்ணுங்க. மறக்காம ஓ போடு என கூறியுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் ஜெமினி படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிறதா? அல்லது ஜெமினி படம் ரீ ரிலீஸ் ஆகிறதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜெமினி படம் ரீ ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மிக்க நன்றி.. for all the love pouring in today. Interesting updates .. இன்னும் சில தினங்களில்.
Any guesses??
& don’t forget to ஓ போடு!! ❤️ pic.twitter.com/3wtq8Yrfbv— Vikram (@chiyaan) April 12, 2024
