தமிழ் சினிமாவில் முதன்முறையாக கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட பாடல்.. அன்றே பெரிய சம்பவம் பண்ணிய ஷங்கர்..!!

By admin on சித்திரை 12, 2024

Spread the love

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த படம் முதல்வன். இந்த படம் கடந்த 1999-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் அர்ஜுனனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்துள்ளார். வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார்.

   

மேலும் சுஷ்மிதா சென், வடிவேல் உள்ளிட்ட ஏராளமான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முதல்வன் திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. மேலும் ஹிந்தியில் நாயக் என பெரும் பொருட்ச அளவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டது. கடந்த 2000 ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருது முதல்வன் திரைப்படத்திற்கு தான் கிடைத்தது.

   

 

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பாடல்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம் பெற்ற முதல்வனே என்ற பாடல் முழுவதும் கிராபிக்ஸ் பயன்படுத்தி எடுத்துள்ளனர்.

சமீபத்தில் சித்ரா வெங்கட்ராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழ் சினிமாவில் முதன்முறையாக கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட பாடல் முதல்வனே பாடல் தான் என கூறியுள்ளார். அதற்கு முன் ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளை மட்டும் கிராபிக்ஸ் பயன்படுத்தி எடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.