ஒரு ட்ரைலர் எடிட் பண்ண 10 லட்சமா..! தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜின் வலது கை..!!

By admin on சித்திரை 9, 2024

Spread the love

இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்த படம் மைதான். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் மைதான் படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

   

இந்த ட்ரெய்லரை தமிழ் திரைப்படத்துறையில் வேலை பார்க்கும் சிறந்த எடிட்டரான ரூபன் எடிட் செய்துள்ளார். இதற்காக ரூபன் 10 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார். ரூபன் முப்பொழுதும் உன் கற்பனைகள், ராஜா ராணி, நான் சிகப்பு மனிதன், திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படங்களிலும் எடிட்டராக வேலை பார்த்துள்ளார். ஒரு ட்ரெய்லரை எடிட் செய்வதற்கு 10 லட்சம் ரூபாயா என ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள்.

   

 

அப்படி இருக்க தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் எடிட்டர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் எடிட்டரான பிரவீன் கே எல் எடிட் செய்வதற்கு 30 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். இவர் கலகலப்பு, அலெக்ஸ் பாண்டியன், தில்லு முல்லு, பிரியாணி, நாய்கள் ஜாக்கிரதை, திருடன் போலீஸ், கொம்பன், கபாலி, மாநாடு, வாரிசு உள்ளிட்ட படங்களில் எடிட்டராக வேலை பார்த்துள்ளார்.

இவரையும் தாண்டி லோகேஷ் கனகராஜின் நண்பரான பிலோமின் ராஜ் ஒரு படத்தை எடிட் செய்வதற்கு 70 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். இவர் மாநகரம், கைதி, ஜெய் பீம், விக்ரம், மாவீரன், ஜப்பான் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக வேலை பார்த்துள்ளார். தற்போது வேட்டையன் படத்திலும் இவர்தான் எடிட்டராக வேலை பார்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.