ரேனி குண்டா படத்தில் வந்த நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..

By admin on சித்திரை 9, 2024

Spread the love

நடிகை சனுஷா பீமா, ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கு சினிமாவில் நானி நடித்த ஜெர்சி திரைப்படத்தில் சனுஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சனுஷா பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் அம்மா மனசு, உன்னியர்ச்சா, வயலின், சுவப்னம் உள்ளிட்ட சீரியல்களிலும் சனுஷா நடித்தார்.

   

 

தாதா சாகிப், மேகமல்ஹர், போர் அண்ட் லவ், மன்சாரம், சௌமியம் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் சனுஷா நடித்தார். தமிழில் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் சந்தானத்தின் கடைசி தங்கையாக நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சந்தானத்தின் தங்கைகள் 3 பேரும் கார்த்தியுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் திரையில் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தது. இந்த நிலையில் சனுஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் தங்கையாக நடித்த நடிகையா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.