சத்யராஜால்தான் என் கேரியர் காலியானதா? கொளுத்திப் போட்ட ரசிகருக்கு விசித்ரா கொடுத்த பதில்!

By vinoth on சித்திரை 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 90 களில் கவர்ச்சி நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாகவும் வலம் வந்தவர் விசித்ரா. கவுண்டமணி செந்தில் கூட்டணியோடு இவர் நடித்த படங்கள் பெரியளவில் கவனம் பெற்றன. சில படங்களில் வில்லி வேடத்திலும் அவர் நடித்திருந்தார். ஆனால் திடீரென ஒரு கட்டத்தில் அவர் காணாமல் போனார்.

அதன் பின்னர் அவரின் ரி எண்ட்ரி தொடராக பிக்பாஸ் அமைந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக நடிகை விசித்ரா பங்கேற்று. அங்கு பாதி நாட்களுக்கு மேல் அவர் தாக்குப் பிடித்தார். ஒரு டாஸ்க்கில் பேசிய விசித்ரா, 2001ம் ஆண்டில், கேரளா மலம்புழாவில் ஷூட்டிங் நடந்த போது ஒரு பிரபல நடிகர் தன்னை ரூமுக்கு வரச்சொன்னதாக குற்றச்சாட்டை வைத்தார்.

   

மேலும் பேசிய தான் அந்த நடிகரின் அறைக்கு போகாததால், தங்கியிருந்த அறைக்கதவை கும்பலாக வந்து தட்டி மிரட்டியதாகவும் ஷூட்டிங் ஸ்பாட்டில், உடலில் பல இடங்களை கைவைத்த நபர்கள் குறித்து புகார் தெரிவித்ததால், ஸ்டண்ட் மாஸ்டர் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறியது, உடனடியாக டிரண்டிங் ஆனது. அந்த படம் 2001ல் எடுக்கப்பட்ட பலேவடிவி என்றும், ரூமுக்கு அழைத்தவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்றும், கன்னத்தில் அறைந்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஏ.விஜய் என்றும் தகவல் பரவி, வைரலானது.

   

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மண்டகசாயம் எனும் சமூகவலைதளப் பக்கத்தில் “தமிழ்ல விசித்ரா முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியவர். ஆனால் சத்யராஜ் மாம்ஸால மிஸ் ஆயிடுச்சு” எனக் கூறியிருந்தார். இந்த பதிவுக்கு பதிலளித்த விசித்ரா சத்யராஜ் சார் தன்னுடைய நடிப்பை நம்பினார் என்று கூறியுள்ளார்.

 

மேலும் அந்த பதிவில் “சத்யராஜ் சார் என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தார். எனக்கு ஒரே மாதிரியான கேரக்டர் வந்ததால நல்ல கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது” எனக் கூறியுள்ளார். சத்யராஜ் இயக்கிய வில்லாதி வில்லன் திரைப்படத்தில் விசித்ரா கொடூரமான ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.