விஜயகாந்தின் இளைய மகன் பிறந்தநாள்.. தம்பிக்கு PORSCHE என்ற சொகுசு காரை பரிசாக வழங்கிய அண்ணன் விஜய பிரபாகரன்..!!

By admin on சித்திரை 6, 2024

Spread the love

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றும் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும், திரையுலக பிரபலங்களும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

   

இன்று விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தனது 31 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். விருதுநகர் சார்பில் சண்முக பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

   

 

இதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சண்முக பாண்டியன் எளிமையான முறையில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த நிலையில் விஜய பிரபாகரன் தனது தம்பியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு PORSCHE என்ற சொகுசு காரை வாங்கி பரிசளித்துள்ளார். இந்திய மதிப்பில் அந்த காரில் விலை 1.36 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாடும் சண்முக பாண்டியனுக்கும், தம்பிக்கு காரை பரிசளித்த விஜய பிரபாகரனுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mano Maddy (@spm_mano)