இசையமைப்பாளரான ஜீவி பிரகாஷ் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவரது பாடல்கள் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக ஏ.ஆர் ரகுமானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பாடகனாக திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.

ரகுமானுடன் இணைந்து பல படங்களில் ஜிவி பிரகாஷ் வேலை பார்த்துள்ளார். பொல்லாதவன், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், சூரரை போற்று உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சூரரை போற்று திரைப்படம் ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருதை தேடி தந்தது. இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார் ஜிவி பிரகாஷ். பின்னர் பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா நடிப்பில் வெளியான கள்வன் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ஒரு படத்தின் பிரமோஷனுக்காக யூடியூப் சேனலுக்கு ஜிவி பிரகாஷ் பேட்டி அளித்தார் அவரிடம் தனுஷ் உடனான நட்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜி வி பிரகாஷ் friend-ன்னா என்னைக்குமே நமக்கு எதோ பிரச்சனையோ அல்லது எதுவானாலும் அந்த நேரத்தில் நம்மோடு தூண் போன்று நிற்க வேண்டும்.

அப்படி தான் நானும் தனுஷும். ஒருவரை ஒருவர் தேவைப்படும் நேரத்தில் கட்டாயமாக உடன் இருப்போம் என கூறினார். பின்னர் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ் நண்பர்கள் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அதன் பின் சேர்ந்து விடுவார்கள். அப்படித்தான் நாங்களும். சுமார் 6 ஆண்டுகள் பேசாமல் இருந்தோம். அதன் பிறகு நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டோம் என கூறியுள்ளார்.

