Connect with us

CINEMA

ரிலீஸ் ஆவதற்கு 2 வாரத்துக்கு முன்னாடி.. படம் ஓடாததற்கு காரணமே மொய்தீன் பாய் தான்.. ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா..

பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை ஒட்டி வெளியான படம் தான் “லால் சலாம்”. இப்படத்தை ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், cameo role-ல் ரஜினிகாந்த் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் சிறப்பு தோட்டத்தில் ரஜினி வருவதாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் வெளியாகி திரைக்கு வந்தபின் படுதோல்வி அடைந்து மண்ணை கவியது. படத்தில் ரஜினிக்கு போதிய அளவு Mass இல்லாததால் ரசிகர்களின் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

இப்படத்தில் ரஜினி வருவதால் 100 கோடிக்கும் மேல் வசூல் ஆகும் என்று நினைத்த எதிர்பார்த்த நிலையில் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மண்ணை தழுவியது என்று கூறலாம், இப்படத்தின் தோல்விக்கு காரணம் அதுவா இதுவா என்று வலைத்தளத்தில் விமர்சனங்கள் பரவி வந்த நிலையில். தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தனியார் சேனல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், இப்ப படத்தை பற்றியும் ரஜினிகாந்த் பற்றி மனம் திறந்து பேசிய ஐஸ்வர்யா ; ஒரு மாசான ஹீரோவை இந்த படத்துக்குள்ள கொண்டு வரனால முக்கிய இரண்டு கதாபாத்திரமும் காணாமல் போயிடுச்சு, இதுல முக்கியமான கதாபாத்திரமே செந்தில் சார்தா, அவரை வச்சு தான் கதையே கொண்டு போறோம்,

   

ஆனா சூப்பர் ஸ்டார் மாதிரி ஒரு பெரிய பிரபலம் படத்துக்குள்ள வந்த உடனே அந்த கதை போகும் போக்கே மறைத்து எல்லோர் பார்வையும் சூப்பர் ஸ்டார் மலே விழ ஆரம்பிச்சுருச்சு. ஆனா இத குற சொல்ல முடியாது, அவங்க எதிர்பார்ப்பே இவர் வர்றத வச்சு தான். சூப்பர் ஸ்டார் மாதிரி ஒரு பெரிய ஆளை படத்துக்குள்ள கொண்டு வந்தோம்னா, அவர் வந்ததுல இருந்து ஆரம்பிச்சு முடியிற வரைக்கும் அவருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க முடியும். அதனாலேயே மத்த கேரக்டர் எல்லாம் கண்ணுக்கு தெரியாமலேயே போயிருச்சு.

ஆனா இருந்தாலும் நாங்க இரண்டாம் பாதில இருந்து தான் ரஜினிய காட்டுற மாதிரி ஐடியாவில் இருந்தோம், ஆனா முதல் பாதி மெதுவா போறனாலயும், ரசிகர்கள் எதிர்பார்த்து வரனால, ஏமாந்துறக்கூடாது என்பதற்காக படம் ரிலீஸ் ஆகுற 2 வாரத்துக்கு முன்னாடி தான் edit-ல முதல் பாதிலேயே ரஜினிய entry கொடுக்குற மாதிரி செட் பண்ணிட்டோம். அதனால தான் இப்படம் முழுக்க முழுக்க தோல்வியை தொட்டதற்கு காரணம் இதுதான். என்று ஐஸ்வர்யா படம் தோல்வி அடைந்ததை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in CINEMA

To Top