கடந்த இரண்டு நாட்களாக தமிழகமே இருண்டு போகும் அளவிற்கு மாபெரும் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் உள்ள பாண்டிச்சேரியில் 9 வயது குழந்தையான நான்காம் வகுப்பு படிக்கும் பச்சிள பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தி கொலை செய்த வழக்கு தற்போது மக்களின் மனதை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. பாண்டிச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர் ஆன சேகர் அவர்களின் மகள் தற்போது 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார், இவரை இரண்டு நாட்களாக காணவில்லை என்று போலீசாரிடம் புகார் கொடுத்த பெற்றோர், நேற்று இரவு சாக்கு பைக்குள் சடலாகமாக கண்டறியப்பட்டார்.
இதனை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், இந்த 9 வயது குழந்தையை 46 வயது மிக்க கருணாஸ் மற்றும் 19 வயதுமிக்க விவேகானந்தன் என்ற இருவரும் சேர்ந்து, இந்த பச்சிள குழந்தையை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார்கள். இந்த கொலையால் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக அந்தக் குழந்தையை ஷாக்கில் கட்டி சாக்கடையில் வீசி உள்ளார்கள்.
இதை கண்டறிந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்து, இவர்களை தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இந்த துக்க செய்தியை தெரிந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் (TVK) தலைவர் விஜய் அவர்கள் மனம் நொந்து இந்தக் குழந்தையின் வீட்டார்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தப் பாவச் செயலை செய்த இருவரையும் தக்க தண்டனை கொடுக்கும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து இணையத்தில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.
TVK கட்சித் தலைவர் விஜய் ; புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக,…
— TVK Vijay (@tvkvijayhq) March 6, 2024
