1991 ஆம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி கொடைக்கானலில் நடந்த சில விஷயங்களை அப்படியே வெளிக்கொண்ட வந்த படம் தான் “குணா”. தற்போது இந்த ஆண்டு குணா படத்தை மையமாக வைத்து குணா வளைவில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக “மஞ்சுமெல் பாய்ஸ்” இயக்கி திரைக்கு கொண்டு வந்தவர் தான் இயக்குனர் சிதம்பரம். தற்போது இந்த படம் வெளி வந்ததிலிருந்து பல நேர்மறையான விமர்சனங்கள் அள்ளிக் குவிக்கின்றனர்.
இப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்கில் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் வந்த குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள். குணா படத்தில் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, இப்படத்தில் “அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” பாடல் இடம் பெற்று இப்படத்தினை மேலும் ஒரு படிக்கு மேல் கொண்டு சென்றது என்று கூறலாம். சற்று இப்படத்தின் தாக்கத்தால் கொடைக்கானலில் உள்ள குணா குகையை காண்பதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என்று மூன்று மாநிலங்களையும் இருக்கும் குடும்பங்கள் முக்கியமாக வாலிபர்கள் இந்த இடத்தை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக வந்து குவிக்கின்றார்கள்.
அப்படி அந்த படம் மக்களிடையே என்ன விளைவை ஏற்படுத்தியது? அந்த படத்தில் என்ன விஷயங்கள் உள்ளது என்று பார்ப்போம் ; மஞ்சுமெல் என்ற இடத்தில் இருந்து 11 நண்பர்கள் சுற்றிப் பார்ப்பதற்காக கொடைக்கானல் வந்த பொழுது, அந்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர் தவறி குணா குகையில் விழுந்து விடுகிறார், அவரை காப்பாற்றி தன் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதே இப்படத்தின் மையக் கருத்தாகும். இப்படம் 2007 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது, தற்போது இந்த படத்தை மிக அற்புதமாக ஸ்கிரீன் ப்ரெசென்ட் மற்றும் இயக்கம் சிதம்பரம் அவர்கள் அருமையாக இயக்கியுள்ளார், அதனால் இப்படத்திற்கு பெரும் பாராட்டுகள் வந்து குவிக்கின்றன.
கமல்ஹாசன், தனுஷ், உதயநிதி ஸ்டாலின் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படத்தின் கலெக்ஷன் கிட்டத்தட்ட 78 கோடியை தாண்டி உள்ளது. அதை தாண்டி மக்கள் இப்படத்தை எவ்வளவு விரும்புகிறார்கள் என்றால், இப்படத்தை பார்த்த உடனே கொடைக்கானலுக்கு சற்றும் யோசிக்காமல் வண்டி எடுத்துக்கொண்டு அந்த குணா குகையை காண்பதற்காக கூட்டம் கூட்டமாக அலைமோதி கொண்டு வந்து குவிக்கிறார்கள். அவ்வளவு தாக்கத்தை மக்கள் மத்தியில் இப்படம் ஏற்படுத்தி உள்ளது.
This is the current situation of Madhikettan Solai, where the Guna cave is located.
The effect of #ManjummelBoys.
— Films and Stuffs (@filmsandstuffs) March 4, 2024
