இணையதளத்தில் சிறுவன் ஒருவன் தனது அப்பாவிற்காக பணம் வேண்டும் என்று உதவி கேட்டுள்ளான். இதை கண்ட “ஜிவி பிரகாஷ்” சற்றும் யோசிக்காமல் அந்தப் பையன் மனம் நெகிழும் படி செய்து விட்டார். இதை கண்ட ரசிகர்கள் ஜிவி பிரகாஷ் புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பட தயாரிப்பாளர் இன்று பன்முகம் கொண்டு திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் பசுபதி, புவனா, பிரியங்கா, பிஹா ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த “வெயில்” படத்தில் மாபெரும் இசையை அமைத்து தமிழ் திரையுலகில் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்று அறிமுகமானார். இவர் இதற்கு முன்னால் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு துணை கம்போசராக பணிபுரிந்து வந்தார், இவரது மாமா ஏ.ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசை அமைப்பாளர் உடன் பணிபுரிந்துள்ளார். அதன் பின் அவர் வெயில், மதராசபட்டினம், மயக்கம் என்ன, தலைவா போன்ற பல பிரம்மாண்ட படங்களில் இசையமைத்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்.
அதன் பின்னதாக நடிப்பில் ஆர்வம் கொண்டு டார்லிங் என்ற படம் மூலம் தமிழ் திரை உலகில் முதல் முதலில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் கடவுள் இருக்கான் குமாரு, திரிஷா இல்லனா நயன்தாரா, புரூஸ்லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படங்கள் நடித்துள்ளார். தற்போது ஒரு விவசாய குடும்ப வாலிபன் ஒருவர் ஜிவி பிரகாஷின் ட்விட்டர் பக்கத்தில் தன் அப்பாவிற்கும் தனக்கும் உடுத்துவதற்கு உடை இல்லாததால் உதவி கேட்டிருந்தார்.
அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் என்னால் உடையை வாங்கி அனுப்ப முடியாது, அதனால் உன்னுடைய ஆன்லைன் பண வர்த்தக நம்பரை(G-pay number) அனுப்பு அதில் நான் பணத்தை போட்டு விடுகிறேன் என்று சொல்லி 6000 ரூபாயை அந்த நபருக்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் தந்துள்ளார். இந்த உதவியைப் பெற்ற அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் ஜிவி பிரகாஷ் கொடுத்த பணத்திற்கு நன்றி கூறி நான் இதை வாழ்க்கையிலே மறக்க மாட்டேன் என்று பதிவு ஒன்று போட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்து கூறி இந்த பதிவை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
