வடக்கே அம்பானி குடும்பம் களைகட்ட.. தெற்க்கே பலகோடிகளை கல்லாகட்டும் மஞ்சுமேல் பாய்ஸ்.. இதுவரை செய்த வசூல்..

By Ranjith Kumar on பங்குனி 4, 2024

Spread the love

மலையாளத்தில் முதல்முறையாக இதுவரை எந்த படமும் பண்ணாத மிகப்பெரிய பிரேக்கிங் ரெக்கார்டு பண்ணி உள்ளது தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை மலையாள படம் வாங்காத வசூலை இப்படம் வாங்கியுள்ளது. “மஞ்சுமல் பாய்ஸ்” என்ற மலையாள படம் மலையாளத்தில் தாண்டி பல இடங்களில் வெற்றித் கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக தமிழில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான வசூலை இயக்குனர் தெரிவித்து இருக்கிறார். 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகை இல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த படம் தான் இது. இப்படத்தில் கேரளாவில் உள்ள மஞ்சுமல் என்ற இடத்தில் இருந்து 11 நண்பர்கள் கூடி கொடைக்கானலில் சுற்றுலா வந்துள்ளார்கள். அங்குத் தெரியாமல் 11 நண்பர்கள் ஒருவர் குணா குகைக்குள் விழுந்து விடுகிறார், மீதி உள்ள 10 நண்பர்கள் இவர் ஒருவரை காப்பாற்றுவதை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

   

இப்படம் 60% மேலாக தமிழ் மொழியில் இயக்கப்பட்டு முக்கியமாக கொடைக்கானலில் எடுக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் மிக பிரபலமாக தமிழில் வரவேற்கத்தக்க காரணம் இதான். சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் லால் ஜூனியர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது, முடிந்த மார்ச் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் மொத்த திரையரங்கம் கவர் பண்ணி 73. 29% தன் தாக்கத்தை காண்பித்துள்ளது.

   

முதல் நாளில் மட்டும் 3.3 கோடி அளவில் மிதமான சூட்டில் கலெக்ஷனை ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வந்து மொத்தமாக சேர்த்து 46. 34 கோடி பசலை வாங்கி, மற்ற நாடுகளான வெளிநாட்டில் மட்டும் 33 கோடி வசூலை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 11 நாளில் வந்த வசூல் 76.65 கோடி வசூலை பெற்று மலையாளத்தில் முன்னணி படமாக வளம் வந்து கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் தற்போது வெளியாகி திரையரங்கில் 69.7 சதவீதம் தாக்கத்தை காண்பித்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் 100 கோடியே தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.