சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு காட்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் கிளாப் போர்டு அடிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா.?

By Ranjith Kumar on பங்குனி 3, 2024

Spread the love

சினிமாவில் பல டெக்னிக்கல் டிபார்ட்மெண்ட், ஆக்டிங் டிபார்ட்மென்ட், எடிட்டிங் போன்றவற்றை இருந்தாலும், படத்தின் படபிடிப்பு தளத்தில் சாட் தயாராகும் முன்பு அடிக்கும் கிளாப் போர்டுக்கு மிகத் தனித்துவமான சிறப்புகள் பல உண்டு. தமிழ் சினிமாவில் கடந்த 150 வருட காலமாக சினிமா இயங்கி வருகிறது, அதில் பல ஆயிரம் படங்கள் பார்த்திருப்போம்.

பொதுவாக படங்கள் நன்றாக அமைந்திருந்தால் நாம் இயக்குனரையும் அல்லது தயாரிப்பாளரையோ, நடிகர்களையோ, எடிட்டரியோ, நடிகர்களையோ, இசையமைப்பாளர் தான் பாராட்டி பேசிக்கொண்டிருப்போம். ஆனால் படத்திற்கு பின்புறமாக வேலை பார்த்த டெக்னீசியங்களை பற்றியும் யாரும் ஒரு போதும் பேசியதில்லை, பெரும்பான்மை இடங்களில் படத்தின் இயக்குனர் நடிகர்கள் இசையமைப்பாளர்களைப் பற்றி மட்டும் தான் நாம் பேசியதுண்டு பல அவார்டுகளை வழங்கியதுண்டு, படம் உருவாக காரணமாக இருந்த ஆரம்ப காலகட்டத்தில் இதற்கு உறுதுணையாக இருந்த டெக்னீசியன்களை பற்றி பலரும் பேசியதில்லை,

   

அதில் முக்கியமான ஒரு விஷயம் தான் கிளாப் போர்டு அடிப்பது, படம் துவங்கும் சமயத்தில் ரோலிங் ஆக்சன் என்று சொன்னவுடன் ஒருவர் சென்று நடிகருக்கும் கேமராவுக்கும் நடுவில் “கிளாப் போர்டு” ஒன்றை அடிப்பார், அது பெரும்பான்மையோருக்கு எதற்கு என்று தெரியாது? அது எதற்கென்றால், ஒரு ஷாட் தவறாக முடிந்து விட்டால் அதை சாட்டை மறுபடியும் எடுக்கும் பொழுது ஒரே சீக்வன்ஸ் பல சாட்டுகளாக எடுக்கப்பட்டிருக்கும், அதை கண்டுபிடிப்பதற்காக மட்டும் அந்த கிளாஸ் போர்டில் இந்த படத்தின் எத்தனாவது சீனில் இது இந்த ஷாட் என்று குறிப்பிட்டு எழுதி வைத்து அந்த கிலாபோடை அடிப்பதன் மூலம் எடிட் செய்யும் பொழுது அதை பார்த்து படத்தில் எடிட்டிங் கில் பொருத்துவதற்கு உபயோகமாக இருக்கும்.

   

அது மட்டுமில்லாமல் கிளாப் போரில் சவுண்டோட அடிப்பதற்கு காரணம், எடிட் செய்யும்போது அதில் ஒரு கிராக் சவுண்ட் இருக்கும் அதை வைத்து அதன் அளவை மட்டப்படுத்தி எடிட்டிங் சமயத்தில் பிக்ஸ் பண்றதுக்கு ஒரு நல்ல உபயோகமாக இருப்பதனால் இந்த கிளாஸ் போர்டை காலங்காலமாக சினிமாவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதுவே கிளாப் போட்டு அடிப்பதற்கான முக்கியமான காரணம், கிளாப் போர்டு அடிப்பது மிக நுணுக்கமான ஒரு விஷயம், இதை பாரம்பரியத்திற்காக பண்ணவில்லை, இது படத்தின் பிற்பாடு செய்யும் வேலைக்கு மிக உபயோகமாக இருப்பதால் இதுவரை கடைபிடிக்கப்பட்டுள்ளது.