Connect with us

CINEMA

‘ஜோஸ்வா ‘ பட ஹீரோயின் இந்த பிக் பாஸ் பிரபலத்தோட மனைவியா..? அதுமட்டுமில்லங்க 2 குழந்தைகளும் இருக்காங்களாம்…

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜோஷ்வா இமைபோல் காக்க. ஐசரி கே. கணேஷ் தயாரித்திருந்த இப்படத்தில் வருண் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தின் கதநாயகியாக  நடிகை ராஹி  நடித்திருந்தார்.  இத்திரைப்படம்  எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறவில்லை. இத்திரைப்படத்தில் அறிமுக நடிகையாக களமிறங்கிய ராஹி யார் தெரியுமா..? அவர் வேறு யாரும் இல்லை.  பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வின் மனைவி தான் ராகி.

#image_title

   

பிக் பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னர் தான் நடிகர் ஆரவ். . இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே ஓ காதல் கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  ஆனால் இவர் நடிகை ராகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து கூறினர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் மூலமாக மார்க்கெட் ராஜா,  உதயநிதி நடிப்பில் வெளியான கலகத் தலைவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி ‘ விடாமுயற்சி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆரவ் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆரவ் – ராகி ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top