மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ‘சூரி’ பட நடிகை… சொக்கி போன ரசிகர்கள்…

By Begam on பங்குனி 3, 2024

Spread the love

மலையாளத் திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அன்னா பென்.இவர் பாஹத் பாசில், சோனு நிகம், சோப்பின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘கும்பளங்கி நைட்ஸ்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார்.

   

பின்னர் ‘ஹெலன்’ படத்தில் நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். ஹெலன் படத்திற்காக இவருக்கு நடுவர்களின் சிறப்பு விருது பிரிவில் கேரளா மாநில அரசு விருது கிடைத்தது.

   

 

திரையில் அன்னா நடிக்கிறாரா..? அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டாரா..? வாழ்கிறார் என்று நினைக்கும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.இவர் தமிழில்  நடிகர் சூரியுடன் இணைந்து கொட்டுகாளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் முதன்முதலாக கால் பதித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு தற்பொழுது மலையாளத்திலும், தமிழிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘ சூரி பட நடிகையா இது..?’ என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.