பூஜா முதல் மமீதா பைஜூ வரை… பாலாவிடம் அடிவாங்கியதாக கிசுகிசுக்கப்பட்ட 6 நடிகைகள்… வாரிசு நடிகைக்கு நேர்ந்த சோகம்…

By Begam on பங்குனி 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் பாலா. இவர் தனது திரைப்படங்கள் எப்பொழுதும் தத்துரூபமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர். அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். நடிகர்களிடமும், நடிகைகளிடமும் சில சமயங்களில் அடாவடியாக கூட நடந்து கொள்வார். இதனால் அவ்வப்பொழுது சர்ச்சைகளிலும் சிக்குவார். அப்படி இயக்குனர் பாலா அடித்ததாக கூறி கிசுகிசுக்கப்பட்ட 6 நடிகைகளை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

   

நடிகை பூஜா:

   

நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘நான் கடவுள்’. இத்திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கினார். பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இத்திரைப்படத்தில் நடிகை பூஜா கண்ணிழந்த பிச்சைக்காரியாக நடித்திருப்பார். இவரை பார்க்கும் பொழுதே நம் கண்களில் கண்ணீர் வரும். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்திற்காக அவர் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். ஆனால் இத்திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

 

நடிகை லைலா:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை லைலா. இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் என இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படங்கள் இரண்டுமே இவரது சினிமா கெரியேரில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது .பிதாமகன் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவை துரத்தும் காட்சியில் லைலாவை நிஜமாகவே ஓட விட்டாராம் பாலா.

நடிகை வேதிகா:

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பரதேசி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகை வேதிகா தனது முழுமையான, திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பஞ்சத்தை மற்றும் அடிமைத்தனத்தை கண்முன் நிறுத்தும் இத்திரைப்படத்திற்காக அதில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் நிஜமாகவே அடி வாங்கினார்களாம்.

நடிகை தன்ஷிகா:

பரதேசி படத்தில் நடித்த நடிகைகளில் ஒருவர் தான் தன்ஷிகா. இவர் அடிமைத்தனத்தின் உச்சத்தை கண் முன் நிறுத்தி இருப்பார். இத்திரைப்படத்தில் கங்காணியிடம் உண்மையாகவே அடி வாங்கினாராம்.

#image_title

நடிகை வரலட்சுமி :

பாலா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் , நடிகை வரலட்சுமி  நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தாரை தப்பட்டை. இத்திரைப்படத்தில் நடித்த வில்லன் நடிகர் ஆர் கே சுரேஷ் வரலட்சுமி நெஞ்சில் ஏறி மிதித்து உண்மையாகவே எலும்பு முறிந்து விட்டதாம். அதுமட்டுமின்றி வரலக்ஷ்மிக்கு ஒரு சீனில் கண்ணாடி குத்தி தையலும் போடப்பட்டிருக்கிறது.

நடிகை மமீதா பைஜூ:

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் வணங்கான். இத்திரைப்படத்தில் முதன் முதலில் கேரள நடிகை மமீதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டார். சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை மம்தா பைஜுவின் தோள் மீது இயக்குனர் பாலா தட்டி நடிக்க சொன்னதாக அவரே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.