என்னாச்சு இவருக்கு..? ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் ‘ஆடுகளம்’ பட பேட்டைக்காரன்.. வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்..

By Begam on பங்குனி 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘ஆடுகளம்’. இத்திரைப்படம் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் இரண்டாவது உருவான வெற்றி திரைப்படம். இப்படத்தில் கிஷோர், நரேன், ஜெயபாலன், டாப்சீ உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

   

ஆடுகளம் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. 2011ல் வெளியாகிய திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷுக்கும் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

 

இத்திரைப்படத்தில் ‘பேட்டைக்காரன்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் வி.ஐ.எஸ். ஜெயபாலன். இவர் நடிகர் மட்டுமின்றி எழுத்தாளராகவும் வலம் வந்தவர். இலங்கையில் பிறந்த இவர் தனது இளம் வயதில் இருந்தே எழுத துவங்கியுள்ளார். ஆடுகளம் படத்தின் மூலம் நடிகராக மாறிய இவர், பின் பாண்டியநாடு, மெட்ராஸ், இன்று நேற்று நாளை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஜெயபாலன் அவர்கள், ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது எனவும் கூறப்படுகிறது. தற்பொழுது இவர் மருத்துமவனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்…