800 படங்களுக்கு மேல் நடித்து, ரசிகர்களின் மனத்தை கொள்ளையடித்த இந்த 90ஸ் நடிகை யாருன்னு தெரியுதா..?

By Begam on பங்குனி 1, 2024

Spread the love

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் 90’ஸ் பிரபல முன்னணி நடிகையான நடிகை ஸ்ரீவித்யாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீவித்யா.

#image_title

மறைந்த நடிகர் ஸ்ரீவித்யாவை நினைக்கும் பொழுதெல்லாம் அதிசய ராகம், அபூர்வ ராகம் என்ற பாடலும், அதில் அவர் கண்களின் பேரெளிலும் நடிப்பாற்றலும் தான் நம் கண்களின் முன் தோன்றும். தன்னுடைய 13 வயதில் ‘திருவருட்செல்வர்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீவித்யா.

   
   

 

இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல், ரஜினி, விஜயகாந்,த் சரத்குமார், பிரபு, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் சுமார் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாயார் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி எம் எல் வசந்தகுமாரி. இவர் ‘சட்டம்’ என்ற படத்தில் மலையாள திரையுலகில் அறிமுகமானார்.

மலையாளத்தில் மட்டும் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் . தமிழில் இமயம், அபூர்வராகங்கள், புன்னகை மன்னன், அபூர்வ சகோதரர்கள், காதலுக்கு மரியாதை தளபதி, நம்மவர் என பல வெற்றி படங்களில் நடித்து அசத்தியவர். இதைத்தொடர்ந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் 2006ல் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இவர் மரணப்படுக்கையில் இருக்கும் போது தனது சொத்துக்களை எல்லாம் ஏழை குழந்தைகளுக்கு எழுதி வைத்துவிட்டார். நடிகை ஸ்ரீவித்யா 1976ல் ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தனர். தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில்  ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.