Connect with us

CINEMA

திருமண கோலத்தில் நடிகை சமந்தாவா…? வெளியான புகைப்படத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த ‘குஷி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து பல்வேறு வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

   

தற்பொழுது நடிகை சமந்தா நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட்டு விட்டு மயோசிட்டிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்து வருகிறார்.  நடிகை சமந்தா , நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், தற்பொழுது இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதும் நாம் அறிந்ததே. இதைத்தொடர்ந்து இருவரும் இரண்டாவது திருமணம் முடிக்க இருப்பதாகவும் இணையத்தில் அவ்வப்பொழுது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், தனது திறமையான நடிப்பால் அனைத்தையும் தகர்த்தெறிந்து திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராகவே வலம் வந்து கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்பொழுது மீண்டும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ நடிகை சமந்தாவுக்கு மீண்டும் திருமணமா…? என்று குழப்பத்தில் இருந்தனர். ஆனால் இந்த புகைப்படம் நடிகை சமந்தாவின் தீவிர ரசிகை ஒருவர் , சமந்தா திருமண கோலத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல உடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் என்று ரசிகர்கள் குழப்பத்திலிருந்து விடுபட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம்…

Continue Reading

More in CINEMA

To Top