Connect with us

CINEMA

சாய் பல்லவி வேண்டாம் என்று ஒதுக்கிய 7 சூப்பர் ஹிட் படங்கள்.. விஜயின் சூப்பர்ஹிட் படத்திலே நடிக்க மறுத்தது ஏன்..?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை  சாய் பல்லவி. இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக எஸ்கே 21 ‘அமரன்; திரைப்படம் உருவாகி வருகிறது.

   

தன்னை தேடி வரும் அனைத்து திரைப்படங்களிலும் நடிக்காமல், தனக்கு பிடித்த, தனக்கு ஏற்ற கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதே போல் தனக்கு பிடிக்காத பல கதைகளை இவர் வேண்டாம் என கூறியிருக்கிறார். அப்படி சாய் பல்லவி வேண்டாம் என கூறி சூப்பர் ஹிட் அடித்த 7 திரைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

போலா ஷங்கர்:

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் போலோ சங்கர். திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவிக்கு நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது . இந்த கதாபாத்திரம் பிடிக்காததால் அவர் இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

காற்று வெளியிடை:

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் காற்று வெளியிடை. இத்திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க நடிகை சாய் பல்லவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு இத்திரைப்படத்தின் கதை பிடிக்காததால் திரைப்படத்தில் அவர் நடிக்கவில்லையாம்.

டியர் காம்ரேட்:

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்து திரைப்படம் Dear Comrade. இப்படத்தில் ராஷ்மிகா நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் சாய் பல்லவி தான் நடிக்கவிருந்தாராம். ஆனால், படத்தில் அதிகமாக முத்தக்காட்சி இருந்ததால் இப்படத்தில் சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டாராம்.

சரிலேறு நெகெவ்ரு( Sarileru Neekevvaru ) :

நடிகர் மகேஷ்பாபு மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம். இத்திரைப்படத்தில் முதன் முதலில் ராஷ்மிகா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவி தான் தேர்ந்தெடுக்கப்பட்டாராம். ஆனால்  தனது கதாபாத்திரத்திற்கு படத்தில் முக்கியத்துவம்  இல்லை என்று திரைப்படத்தை  நிராகரித்து விட்டாராம்.

லியோ :

தளபதி விஜய், நடிகை திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்  லியோ. இத்திரைப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு பதிலாக முதன் முதலில் நடிகை சாய் பல்லவி தான் நடிக்கவிருந்தாராம். ஆனால் அவரிடம் கதை கூறிய போது அவருக்கு தனது கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாதது போல இருந்ததால் அவர் லியோ  படத்தை நிராகரித்துவிட்டாராம்.

வலிமை:

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த வலிமை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஹுமா குரேஷி. ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சாய் பல்லவி தானாம். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால் வலிமை படத்தை நிராகரித்து விட்டாராம் சாய் பல்லவி.

வாரிசு:

நடிகர் விஜய், ராஸ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்த திரைப்படம் வாரிசு. இத்திரைப்படத்திலும் ராஷ்மிகா மந்தனா  கதாபாத்திரத்தை முதன் முதலில் நடிக்க விருந்தது நடிகை சாய் பல்லவிதானாம். ஆனால் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை எனக் கூறி இந்த கதையையும் நிராகரித்து விட்டாராம் நடிகை சாய் பல்லவி.

Continue Reading

More in CINEMA

To Top