ப்ரண்ட்ஷிப் SONG-னா உடனே ஞாபகம் வரும் 5 பாடல்கள்.. காலங்கள் கடந்தும் மறையாத ‘காட்டுகியிலு மனசுக்குள்ள’ பாட்டு..

By Ranjith Kumar on மாசி 20, 2024

Spread the love

இக்காலகட்டத்தில் எந்த உறவு இல்லாமலும் வாழலாம், ஆனால் நண்பன் என்ற ஒரு உறவு இன்றி இவ்வுலகில் வாழ ஒருவனாலும் முடியாது, நமக்கு பிரச்சனை என்றால் சொந்த பந்தங்கள் வருவார்களா என்று சந்தேகம் தான், ஆனால் நண்பன் கண்டிப்பாக நமக்காக வந்து நிற்பான், வாழ்க்கையில் நண்பன் என்பவன் மிக முக்கியமான ஒருவன். அதற்காக இந்த தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பல படங்கள் உண்டு, நண்பன், ஒரு கல் ஒரு கண்ணாடி, பிரண்ட்ஸ், என்றென்றும் புன்னகை, கப்பல், தளபதி, பசங்க, நாடோடிகள், சுந்தரபாண்டியபுரம், சுப்பிரமணியபுரம் என்று பல படங்கள் தமிழ் சினிமாவில் நண்பனுக்காக படைக்கப்பட்ட படைப்புகள் பல உண்டு. அதேபோல் ஒவ்வொரு படங்களிலும் நண்பனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுப்பது போல் நண்பனுக்காக பாடல்களும் ஒவ்வொரு படத்திலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும், தற்போது நம் தமிழ் சினிமாவில் நண்பனுக்காகவே உருவாக்கப்பட்டு ஒவ்வொரு சீசனிலும் அழியாமல் இருக்கும் ஐந்து முக்கியமான பாடல்களை பார்ப்போம்.

மணிரத்ன இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்முட்டி அவர்களின் இணை பிரியாத நட்பின் மூலம் அப்படத்தில் வரும் சிறப்பான பாடல் தான் “காட்டுக்குயிலே மனசுக்குள்ள பாட்டுக் கேட்கும் பஞ்சமில்லை பாடத்தான்” என்ற நண்பனுக்கு உறுத்தான பாட்டு என்றும் மக்கள் மனதில் அழியாத ஒன்று.

   

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் காதல் தேசம் படம் மூலம் வெளியான “முஸ்தபா முஸ்தபா” பாடல் 90 கால கட்டத்தில் இருந்து இப்போ வரை நண்பனுக்காகவே எழுதப்பட்ட பாடல் ஆகும்.

   


கேவி கேவி ஆனந்த் படைப்பில் நண்பனுக்கே என்று உருவாக்கப்பட்ட படம் தான் கோ இப்படம் முழுக்க முழுக்க நண்பனை சார்ந்து இயக்கப்பட்டுள்ளது, இப்படத்தில் நண்பர்களுக்காகவே இயக்கப்பட்ட ஒரு பாடல் தான் “கல-கல-காலா Gang’u” ஆகும்.

 


L. அஹமத் இயக்குனர் மூலம் நண்பனுக்காகவே படைக்கப்பட்ட படம்தான் என்றென்றும் புன்னகை, அப்பாடத்தில் நண்பர்கள் இணைந்தால் எவ்வளவு பெரிய எல்லைனாலும் தொடலாம் என்பதற்காக இசைக்கப்பட்ட பாடல் தான் “ஏலே ஏலே தோஸ்து டா”.


பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய படம் தான் “நண்பன்”, இப்படத்தில் விஜய், ஜீவா, பிரசாந்த் ஆகியவர்களின் கரை நீங்காத நட்பை பெரிதளவும் போற்றி காமித்திருக்கும், இவர் மூவர்கள் நட்பின் புனித “என் பிரண்ட போல யாரு மச்சான்” இப்பாடலாகும்.


இவை அனைத்தும் நண்பர்கள் என்றாலே ஞாபகம் வரும் பாடலாகும், இது என்றென்றும் மாறாமல் மறையாமல் எல்லா காலகட்டங்களிலும் இருந்து வருகின்றனர். இதுபோல நண்பர்களுக்கென்றே பல பாடல்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றன.