தனுஷ் அவர்கள் கடைசியாக “பா பாண்டி” படத்தை எழுதி அவரே இயக்கி அப்படத்தை வெளியிட்டு இருந்தார், அப்படம் தமிழ் சினிமாவில் பெரும் பேசும் பொருளாக மாறி “ராஜ்கிரன்” அவர்களுக்கு மீண்டும் ஒரு தமிழ் திரையுலில் உலகில் ரசிகர்களுக்கு புத்துணர்வை தந்ததே என்று கூறலாம. தனுஷ் நீண்ட வருடங்களுக்குப் பின்னர் அவரே எழுதி அவரே இயற்றிய படம் தான் தனுஷ் 50 இப்படத்திற்கான டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.
தனுஷ் எழுதிய படத்தில் தனுஷ் ஹீரோவாகவும் நித்தியாமேனன் ஹீரோயினியாகவும் அதன் பின் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்துள்ளார்கள். கலாநிதி மாறன் ப்ரொடக்ஷனான சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்து வெளியிட உள்ளது. நீண்ட நாள் பின்னர் தனுஷ் அவர்கள் இப்படத்தை எழுதி இயக்குவதால் ரசிகர் மத்தியில் மிக எதிர்பார்ப்பு உள்ளது,
இதற்கு முன்னதாக செல்வராகவன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான “நானே வருவேன்” படத்திற்கும் தனுஷ் அவர்கள் தான் கதையும் வசனமும் எழுதியிருந்தார், ஆனால் கதை எழுதியது தனுஷ் என்றாலும் செல்வராகவன் இயக்கத்தில் அது மாறுபட்டு தான் இருந்தது, ஆனால் “பா பாண்டி” படத்திற்குப் பிறகு தனுஷ் நடிக்கும் இப்படத்தில் முழுக்க முழுக்க கதையும் இயக்கமும் இவரே செய்துள்ளார், இதற்காகவே எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக தான் உள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பாக இப்படத்திற்கான டைட்டில் “ராயன்” என்று தயாரிப்பாளர் சன் பிக்சர் கலாநிதி மாறன் அவர்களின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தார்கள்.
வெளியிட்ட சில வினாடிகளில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வருகிறது, இதில் தனுஷ் அவர்களின் கெட்டப் மிகவும் வித்தியாசமாக ஒரு கேங்ஸ்டர் படத்திற்கான உள்தோற்றத்தையும் காட்டியிருந்தது, தனுசு உடன் இதற்கு முன் கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றிய சந்திப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராமன் இப்பட போஸ்டரில் இணைந்து ஒரு மிரட்டலான லுக்கில் மூவரும் மிரட்டி இருக்கிறார்கள்.
View this post on Instagram
