உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான படைப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி.

மலையாள நடிகையான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

#image_title

அந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாககவர்ந்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.

அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படத்தில் பத்திரிக்கையாளராக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து அசத்தியிருந்தார்.

இவரின் நடிப்பில் வெளியான கட்டாகுஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி தமிழ், மலையாளம் என தற்பொழுது பிசியாக நடித்துவரும் இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்போது Black & White ல் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

