90ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை சாக்ஷி சிவானந்த். இவர் 1997 இல் வெளிவந்த ‘புதையல்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இத்திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி மற்றும் அரவிந்த்சாமி நடித்திருந்தனர். தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபு நடிப்பில் வெளிவந்த ‘மாப்பிள்ளை கவுண்டர்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

இதை தொடர்ந்து இவர் விஜயகாந்த் உடன் நடித்த வாஞ்சிநாதன் திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது. 90ஸ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் வேதம் மானஸ்தன் இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஆதி பகவான் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார்.

இன்றளவும் ‘ராசா ராசா உன்ன வைச்சிருக்கேன் நெஞ்சுல’ பாடல் 90′ ஸ் ரசிகர்கள் பலரின் பாவரைட் லிஸ்டில் இருக்கும். தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

திரையுலகில் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்பொழுது 46 வயதாகும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.
