Connect with us

CINEMA

90 கோடி செலவில் உருவான அயலான்.. தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி நஷ்ட்டமா..? வெளிவந்த உண்மையான வசூல் ரிப்போர்ட் இதோ..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணியில் இருக்கக் கூடிய சிவகார்த்திகேயன், எழுத்தாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக இருந்து வரும் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்து வருகிறது.

டாக்டர் படத்திற்கு பிறகு பிரின்ஸ், டான் என வெளியான படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், மாவீரன் படம் ஓரளவு அவருக்கு வெற்றியைத் தந்தது. அதன்பிறகு கிட்டத்தட்ட 2 வருடங்களாக அவர் உழைத்த படமான அயலான் படம் வெற்றி பெற்றதா? இல்லையா என்றால் அது குழப்பமாகவே நீடிக்கிறது.

   

#image_title

2022-ம் ஆண்டு பூஜையோடு தொடங்கிய அயலான் படத்தின் படப்பிடிப்பு விரைவாகவே நிறைவடைந்த நிலையில், படத்தில் ஏலியன் சிஜி என கிராஃபிக்ஸ் பணிக்காக இரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்கவில்ல எனக் கூறிவந்தார். இந்த நிலையில் தான் படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியானது அயலான் திரைப்படம். குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான படமாக ஓரளவு இருந்ததால் படம் ஓரளவு ஓடியது எனலாம்.

#image_title

ஆனால் அவரது ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தையே கொடுத்தது எனலாம். ரூ.95.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு – ரூ.5கோடி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு – ரூ.2.25கோடி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு – ரூ.2கோடி, ரகுல் ப்ரீத் சிங்க்கு – ரூ.1கோடி, இயக்குநர் ரவிக்குமாருக்கு – ரூ.50லட்சம், இதர டெக்னீசியன்களுக்கு – ரூ.4கோடி என சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது. சம்பளம் மட்டுமே இப்படத்திற்காக ரூ.15கோடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் ரூ.95.5கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் மொத்தமாக ரூ.86.75கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அப்படியெனில் ரூ.8.75கோடி தயாரிப்பாளருக்கு இப்படம் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top