என் அண்ணன் விஜய்யால் நான் நிறைய படத்தை மிஸ் பண்ணிருக்க.. இயக்குனர்களுக்கு என் அண்ணன் விஜய் மேலதா.. மனம் உருகி பேசிய விக்ராந்த்..

By Ranjith Kumar on மாசி 5, 2024

Spread the love

தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கிங்கானா தளபதி விஜயின் தம்பி விக்ராந்த் அவர்கள் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமாகி இப்ப வரை பல படங்களில் நடித்து வருகிறார், சமீபத்தில் அவர் மார்க்கெட் டவுன் ஆக இருந்தது, சிறிது காலம் நடிக்காமல் இருந்து இப்ப ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வந்து கொண்டிருக்கிறார். vikranth

ஆனால் முந்தைய காலத்தில் அவர் நடித்த சில படங்கள் வெற்றியும் தோல்வியும் கலந்த கலவையாக இருந்தது, அவர்களின் கரியர் ஓர் மிதமான ரேஞ்சில் தான் சென்று கொண்டிருந்தது, அதன் பின் அவரின் படங்கள் எதுவும் வரவில்லை அதற்கு அப்புறமாக பாண்டியநாடு, கெத்து போன்ற சில படங்களில் வில்லனாகவும் குணச்சித்திரனாகவும் நடித்து சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார்.

   

   

அவர் சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும், விஷ்ணு விஷால் நடித்து, சிறப்பு தோற்றத்தில்  ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் இவர் நடித்து வருகிறார், அண்மையில் அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையில் தான் மனம் உருகிய விஷயங்களை பகிர்ந்துள்ளார், அதிலும் முக்கியமாக தன் அண்ணனாகிய இளைய தளபதி விஜய் அவர்களின் பற்றி சில கசப்பான உண்மைகளை பேசி உள்ளார்.

 

” மிகப்பெரிய நடிகரின் தம்பியாக இருப்பதால் தனக்கு வரும் இயக்குனர்கள் அனைவரும் தன்னை வைத்து இயக்கும் பொழுது என் அண்ணனை சார்ந்து அவர்கள் என்னை இயக்கவே முயல்வார்கள், அவர்கள் அனைவரும் என்னை வைத்து இயக்கினாலும் என் அண்ணன் மீது தான் ஃபோக்கஸ் அனைத்தும் இருக்கும், ஆதலாலே நிறைய படங்கள் என் கையை விட்டுப் போய் இருக்கிறது. என் அண்ணன் விஜய் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன், அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார், ஆனாலும் நான் அவரிடம் சினிமா துறை சம்பந்தப்பட்ட எந்த உதவியும் கேட்க போவதில்லை, கேட்கவும் மாட்டேன்.

“”விக்ராந்தின் மனதிற்குள் ஒளிந்திருக்கும் கசப்பான சுவையான” விஷயங்களை லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் வைத்த பேசியுள்ளார்.