தினமும் குடிச்சிட்டு வந்து ஷகிலா என்கிட்ட தப்பா.. வளர்ப்பு மகள் ஷீத்தல் சொன்ன பரபரப்பு தகவல்கள்..

By admin on தை 22, 2024

Spread the love

நடிகை ஷகிலா, தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர். சில்க் ஸ்மிதா, ஷர்மிலி, குஷ்புவுக்கு அடுத்தபடியாக தாராளமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் ஷகிலா நடித்திருக்கிறார். இவர் தனது அண்ணன் மகள் ஷீத்தல் என்பவரை 6 மாத கைக்குழந்தையாக இருந்த போதே தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இப்போது அவர் வளர்ந்த பெண்ணாக உள்ள நிலையில், நேற்று ஒரு தகவல் பரபரப்பாக பரவியது. அதாவது வளர்ப்பு மகள் ஷீத்தல், ஷகிலாவை தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பேசப்பட்டது. இதில் ஷகிலாவின் பெண் வக்கீல் சவுந்தர்யா என்பவரும் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

   

   

இதுகுறித்து ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, நான் சின்ன பெண்ணாக இருக்கும்போதே என் சொந்த அம்மா குறித்தும், அக்கா குறித்தும் ஷகிலா அத்தை அசிங்கமாக பேசுவார். கண்டபடி திட்டுவார். அப்போது நான் சின்னப் பெண் என்பதால் எதுவும் கேட்கவே மாட்டேன்.

 

ஆனால் சமீபத்தில் மிக அசிங்கமாக என் குடும்பத்தினரை பற்றி பேசியதால், கோபித்துக்கொண்டு என் அம்மா வீட்டுக்கு போய்விட்டேன். திரும்பவும் என்னை தினமும் போன் செய்து அழைத்ததால், இவ்வளவு காலம் இங்கேதானே இருந்தோம் என்பதால், மீண்டும் வந்தேன். ஆனால் ஷகிலா அத்தையிடம் நான் பேசவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், என்னை திட்டிக்கொண்டே இருந்தார்.

அவரது வக்கீல் சவுந்தர்யா என்பவர், சமாதானம் பேசுவதற்காக என்னுடைய அம்மா, அக்காவை ஷகிலா அத்தை வீட்டுக்கு, போன் செய்து வரச்சொன்னார். வந்த போது அவர்களிடமும் ஷகிலா அத்தை சண்டை போட்டார். கேவலமாக பேசினார். ஷகிலா அத்தை குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்துவிட்டு என்னை ரூமுக்குள் வைத்து அடிப்பார். தப்பு தப்பாக அசிங்கமாக பேசுவார்.

நானும் பொறுமை இழந்து விட்டேன். என் அம்மா, அக்கா வந்த போதும் என்னை அடித்தார். அப்போது நான் அவரை திருப்பி அடித்தேன். அந்த வக்கீல் தலைமுடியை பிடித்துக்கொண்டு தாக்கியதால் என் அம்மா அவரது கையை கடித்தார். ஆனால் இத்தனை பிரச்னை நடந்த போதும் எங்கள் அப்பா சோபாவில் உட்கார்ந்து சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார், என்று ஷீத்தல் கூறியிருக்கிறார்.