கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.கேப்டனின் உடலுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் மற்றும் பொதுமக்களும் நேரில் வந்து கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அரசுமரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றுவரை அங்கு சென்று பொதுமக்களும் நேரில் வரமுடியாமல் இருந்த பிரபலங்கள் தற்போது நேரில் வந்தும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக பல நலத்திட்டங்களை கொண்டுவந்திருக்கிறார்.தற்போது அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் அவர்களுக்கு அவரது புகழை பரப்புவதற்காகவும் ஒரு நினைவேந்தல் கூட்டம் நடிகர் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. சென்னை தேனம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மாலை சரியாக 6 மணி அளவில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த நினைவேந்தல் கூட்டத்தில் கமல்ஹாசன், ராதாரவி, சரத்குமார் , நாசர்,ராஜ்கிரண்,MS பாஸ்கர், மன்சூர்அலிகான் ,ஆனந்தராஜ்,ரமேஷ் கண்ணா,இயக்குனர் பேரரசு ,ரேகா கார்த்திக் ,ஜெயம்ரவி, விஷால் ,சதீஷ், விக்ரம், பொன்வண்ணன்,சரண்யா பொன்வண்ணன்,ராதா,சத்யராஜ்,சிம்ரன் ,தேவயாணி,விஜய் ஆண்டனி,வையாபுரி,யோகிபாபு,கருணாஸ் ,பார்த்திபன்,வடிவுக்கரசி,சிவக்குமார்,கே.ஆர். விஜயா,கோவை சரளா,சின்னி ஜெயந்த்,ஆர். கே செல்வமணி,அம்பிகா,கலைபுலி எஸ் .தாணு,இயக்குனர் எஸ் பி முத்துராமன், வாகை சந்திரசேகர், எஸ்.வி சேகர் போன்ற பல திரைத்துறையினர் கலந்து கொண்டனர்.

மேலும் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தான் தந்தையில் கனவை நனவாக்குவதாக கூறினார்கள்.இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் விஜயகாந்த் சொல்லில் படி என்னிடத்தில் வருபவர்கள் பசியுடன் செல்லக்கூடாது என்று அவர் சொல்வதை போல் வந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

#image_title
