ரியல் எஸ்டேட், பிரைவேட் ஜெட் என ஆடம்பர வாழ்க்கை வாழும் தல அஜித்.. சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா..?

By Deepika on தை 16, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னனி ஹீரோவாக வளம் வருபவர் நடிகர் அஜீத்குமார். இவர் நடிப்பைத் தவிர ரேஸ் கார் மற்றும் பைக் ஓட்டும் பந்தய வீரர், திரைப்பட தயாரிப்பாளராகவும் நாடக கலைஞரும் ஆவார்.இவர் தமிழில் 1993 ஆம் ஆண்டு செல்வா இயக்கிய அமராவதி படத்தின் மூலம்  ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்திற்கு  ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பு கிடைத்தது.

   

இதனை தொடர்ந்து அவர் பல வெற்றிப்படங்களில்  நடித்துள்ளார். காதல் கோட்டை , காதல்  மன்னன், ஆசை போன்ற படங்கள் அவரை காதன் மன்னனாகவும், அமர்க்களம்  மற்றும் அதனை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் ஆக்சன்  ஹீரோவாகவும்  மாற்றியது. இவர் இதுவரை 60 க்கும் மேற்ப்பட்ட   படங்களில் நடித்துள்ளார். இவர் இதுவரை  நான்கு  விஜய் அவார்ட்ஸ் , 3 சினிமா எக்ஸ்பிரஸ் அவார்ட்ஸ் , 3 பிலிம்பேர்  அவார்ட்ஸ் , 3 தென்னிந்திய திரைப்பட விருதுகள்   ஆகியவற்றைப்  பெற்றுள்ளார்.

   

இவர் எச் வினோத் இயக்கத்தில்  அஜீத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான  படம்  துணிவு   இப்படம்  பல்வேறு விமர்சனங்களை  பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக இப்படத்திற்கு நல்ல வெற்றி கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

அதன்படி அவரின் வீடு , கார், பைக் என  அனைத்தின்  மொத்த சொத்து மதிப்பு ரூ200 கோடி  இருக்கும்அமெரிக்க டாலர் மதிப்பின் படி 30 மில்லியன்  என்று கூறப்படுகிறது. அவர் சம்மதிப்பதில் பெரும் பகுதி  திரைப்படங்களில் இருந்தும் ,பிராண்ட் ஒப்பந்தங்களில் இருந்தும்  கிடைக்கிறது.இந்நிலையில் அவர் நடிகர்களில் சரியாக வரி செலுத்துபவர்களில்  முதலிடம் என்றும், நாட்டிலேயே அதிக வருமான வரி  செலுத்துபவர் என்றும் கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by StockGro (@stock_gro)