நாங்க இத பண்ணல, Script தான்.. மாயா, கமலை வைத்து ட்ரோல் செய்த புகழ் – குரேஷி.. மன்னிப்பு கேட்டு சரண்டர்.. வைரலாகும் வீடியோ..

By Deepika on தை 14, 2024

Spread the love

நாங்கள் செய்தது தவறுதான் இனி இதை எப்போதும் செய்ய மாட்டோம் என்று புகழ் மற்றும் குரேஷி துபாயில்  நடந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளனர்.  பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக உள்ளார்.  இது ஆறு சீசன்களை கடந்து 7 வது சீசனின் பைனல்  இன்று நடைபெறவுள்ளது.

   

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து  வீடியோக்களையும் ,விமர்சனங்களையும்  வெளியிடுவது இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்தே சகஜமான ஒன்றாக இருந்த நிலையில், தற்போது அது எல்லை மீறி கலாய்த்து எடுக்கப்பட்ட  வீடியோக்களையும், விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் போட்டியாளர்கள்  அணிந்துவரும் ஆடைகளையும் கூட விட்டுவைக்கவில்லை.

   

இந்நிலையில்  கோபி மற்றும் சுதாகர் நடத்திவரும் பிக் பாஸ் பரிதாபங்கள் நிகழ்ச்சியில்  தற்போது போட்டியாளராக உள்ள மாயா மற்றும் கமல்ஹாசனை ட்ரோல் செய்து  சேர்த்து  வைத்து நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.இது எல்லை மீறிய நிகழ்ச்சியாக அமைந்ததால் கமல் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்களான  புகழ் மற்றும் குரேஷி இருவரும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில்  மேடையில் கமல்ஹாசனையும் மாயாவையும்  சேர்த்து வைத்து பேசி காமெடி செய்துள்ளனர்.

 

#image_title

இவர்கள் செய்த இந்த செயல் மற்றவர்களை கலாய்ப்பதாக இருந்தாலும் ஒரு வரம்பு இல்லையா என்று எண்ண வைத்துள்ளது..மேலும் இந்த   செயல் ரசிகர்களிடையே கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் புகழ் குரேஷி இருவரும் மன்னிப்புகேட்டு வீடியோ வெளியிட்டனர். அதில் தங்கள் இருவரும் கமல்  ரசிகர்களிடம் நாங்கள் செய்த  தவறு உங்களை காயப்படுத்தியதற்கு  மன்னித்து விடுமாறும் மீண்டும் இது போன்ற செயலை எப்போதும் செய்ய  மாட்டோம் என்றும்  கேட்டுள்ளனர்.    தற்போது அந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.