Connect with us

CINEMA

முன்னாள் கணவர் தனுஷுக்கு பயந்து இப்படி ஒரு முடிவெடுத்தாரா ஐஸ்வர்யா..? இணையத்தில் சர்ச்சைக்குள்ளான விஷயம்..

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பு நடைபெற்றவை போல இப்படத்தில் பல போர்க்காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. தனுஷ் இரு வேறுபட்ட வேடத்தில் படத்தில் வருவதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்படத்தினுடைய படப்பிடிப்பு நடைபெற்றுக் வந்த நிலையில் ஒரு வழியாக பொங்கலை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#image_title

   

முன்னதாக இதே நாள் சூப்பர் ஸ்டாரின் உடைய மகளும் தனுஷினுடைய முன்னாள் மனைவியான சவுந்தர்யா இயக்கி சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் தற்பொழுது அப்படத்தினுடைய ரிலீஸ் தேதி பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார்.

#image_title

ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனத்தின் ‘மிஷன் சாப்டர்’ படம் பொங்கல் வெளியாகவுள்ளதாலும், கேப்டன் மில்லர் படத்துடன் போட்டி போட முடியாததாலும் லால் சலாம் படத்தின் வெளியீட்டு தேதி பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top