இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர்.சி தொடர்ந்து தற்போது அரண்மனை படங்களின் அடுத்தடுத்த பாகங்களை இயக்குவதில் மும்முரம் செலுத்தி வருகிறார். பல நேர்காணல்களில் அவர் தான் இயக்கிய படங்கள் குறித்தும், படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸியமான விசயங்கள் குறித்தும் பகிர்ந்துக் கொள்வார். அந்த வகையில், கலகலப்பு படம் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட நிகழ்வு வைரலாகி வருகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு சந்தானம், விமல், மிர்ச்சி சிவா உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் கலகலப்பு.

#image_title
இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக அஞ்சலியும், மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக ஓவியாவும் நடித்திருந்தனர். பரம்பரை பரம்பரையாக நடத்தி வந்த ஹோட்டல், விமலின் கையில் வர, திருட்டு தம்பியை வைத்துக் கொண்டு பழங்கால சமையலைக் கொண்டு ஹோட்டலை எப்படி மீட்டெடுக்கிறார் விமல் என்பது தான் கதை. அத்தோடு கிராமத்தில் செல்வாக்கோடு இருக்கும் அஞ்சலியின் முறைமாமன் சந்தானத்திடம் இருந்து அஞ்சலியை மீட்டு கொண்டு வந்து திருமணம் செய்து கொள்வது,

#image_title
மிர்ச்சி சிவா ஜெயிலில் இருந்து தான் வந்தார் என்பதை தெரிந்து கொண்ட ஓவியா, தன்னை வெறுத்து விடுவாரோ என்ற பயத்தில் வீட்டை விட்டு செல்லும் மிர்ச்சி சிவா, ஒரு கட்டத்தில் போலீஸ்காரருடன் சூதாடி ஹோட்டலை இழந்து நிற்க, மறுபுறம், செல்போனுக்குள் 20 வைர கற்களை பதுக்கி வைத்து அதனை ஒரு கட்டத்தில் மிர்ச்சி சிவாவிடம் கை மாற, அதனை பிடிக்க வரும் ஒரு கும்பல் என நகைச்சுவையாக செல்லும் இப்படம்.

#image_title
இப்படத்தின் இரண்டாம் பாகம் ஒரு கட்டத்தில் நகராமலேயே இருந்தப் போது, டெல்லி பெல்லி என பாலிவுட்டில் வெளியான படத்திலிருந்து சில காட்சிகளை எடுத்து இப்படத்தில் இணைத்ததாக சுந்தர்.சி கூறியிருக்கிறார். யு டிவி ப்ரொடக்ஷன் சார்பில் ஒரு படத்தை இயக்கும் படி சுந்தர்.சியிடம் வர, அவரும் கலகலப்பு படத்தை அந்த கம்பெனிக்கு இயக்கி கொடுக்கிறார். ஆனால் பாலிவுட்டில் வெளியான டெல்லி பெல்லி படத்தின் தயாரிப்பும் அதே கம்பெனி தான்.

#image_title
கலகலப்பு படத்தின் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கும் போது, தயாரிப்பாளர் தனஞ்செயன் பணம் கொடுக்க வருவதாக கூறியிருக்கிறார். அன்றைய தினம் அவர்கள் எடுக்க இருக்கும் காட்சி அப்படியே டெல்லி பெல்லி படத்தின் கிளைமேக்ஸ் போன்று தான் எழுதியிருக்கிறார் சுந்தர்.சி. இது நினைவுக்கு வர, இளவரசுக்கு கெட்டப் மாற்றி, சிவாவின் நகைச்சுவை கலந்து, அப்போதைக்கு படத்தின் கிளைமேக்ஸ் மாற்றியமைக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.

#image_title
