‘கேப்டன் மில்லர்’ பட விழாவில் பிரபல நடிகைக்கு நடந்த கொடூரம்.. ரௌண்டு கட்டி அடித்து ஓடவிட்ட தனுஷ் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..

By Begam on தை 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்பொழுது தனுஷ் தமிழில் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார்.  ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை  படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்குகிறார்.

   

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் 1930கள் சார்ந்த கதைக்களமாகும். தனுஷ் கேங்ஸ்டராக நடிக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் செல்வராகவன் நடித்த சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். பான் இந்தியா நாயகனாக மாறிவிட்ட தனுஷின் தொடரி, பட்டாஸ், மாறன் உள்ளிட்ட படங்களை தயாரித்த சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாள ஆக்டர் விநாயகன் வில்லன் ரோலில் ஒப்பந்தமாகியுள்ளார்.

   

#image_title

 

இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் அயலான் திரைப்படத்திற்கு போட்டியாக ரிலீசாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களும், கேப்டன் மில்லர் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். இப்படத்தில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி என்பவரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், அவரும் கேப்டன் மில்லர் பட விழாவில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி முடிந்ததும் முன் வரிசையில் அமர்ந்திருந்த நடிகர் தனுஷை பார்க்க ரசிகர்கள் கும்பலாக சென்றுள்ளனர்.

அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த சமயத்தில் அங்கு அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவுக்கு கூட்டத்தில் ஒருவர் பாலியல் சீண்டல் ஈடுபட்டு உள்ளார். இதனால் கடுப்பான ஐஸ்வர்யா அந்த நபரை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்னரே கூல் சுரேஷ் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதியிடம் சரக்கு இசைவெளியீட்டு விழாவில் தவறாக நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

#image_title