நேரு ஸ்டேடியமே அதிர போகுதுல..; கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா ….

By Mahalakshmi on தை 3, 2024

Spread the love

2024 வருடம் ஆரம்பித்த நிலையில் தமிழ் சினிமா துறையில் மாபெரும்  நிகிழ்ச்சியாக “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. இதற்குஇடையே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற  உள்ளது.

கேப்டன் மில்லர் திரைப்படத்தின்  மாபெரும்  நிகழ்ச்சி  இன்று மாலை 6 pm மணிக்கு சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பெரும் விமர்சையாக நிகழ்ச்சி  நடைபெறுகிறது. கேப்டன் மில்லர் திரைப்படத்தின் நடிகனாக  தமிழ் சினிமாவில் டாப் 10  இடத்தில் இருக்கும் தனுஷ் நடித்துள்ளார். தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய அளவில் நல்ல மார்க்கெட் கொண்ட நடிகராகவும்  தனுஷ் கொடிகட்டி பறக்கிறார்.

   

சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில்; அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்; இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்து உருவான  படம் கேப்டன் மில்லர். இந்தத் திரைப்படத்தில்  நடிகர் தனுஷ் ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

   

கேப்டன் மில்லர்  திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கர்நாடக சூப்பர் ஸ்டார்  “சிவராஜ் குமார்” நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சாணி காகிதம், ராக்கி என இரு வெற்றி படங்கள் கொடுத்திருக்கிறார். மூன்றாவது  திரைப்படமாக “கேப்டன் மில்லர்” திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

கேப்டன் மில்லர் திரைப்படமும் வெற்றி படமாக அமையும்  என திரைப்படத்துறையில் எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.